@life

2014-05-11 12.01.36

Religious GRAFFITI


DSCN3473

Slacklining (stick on a stick)

 

Advertisements

கிறுக்கல்

 

வற்றும் குளம்

மீன்களின்

கண்ணீரால் நிரம்புமோ

————–

மௌனம் பழகு

—————

சிலர் சிறந்ததை தேர்ந்து எடுக்கிறார்கள்..

சிலர் தேர்ந்து எடுத்ததை சிறந்தது ஆக்குகிறார்கள்!

(மீதி பயலுவளை பத்தி சொல்லவே வாணாம்)

—————–

இனியாவது….

இனியாவது….
நிறைய படிக்கணும்…
நிறைய யோசிக்கணும்..
நிறைய கேக்கணும்…
நிறைய பேசனும்…
நிறைய எழுதணும்..
நிறைய ஊர் சுத்தணும் …
நிறைய வகை…உணவு….சாப்பிடனும்…
நிறைய விளையாடனும்..
நிறைய நட்பனும்…
நிறைய செய்யனும் ….
மனசு நிறைய

26 Feb

இன்று பிறந்த நாள் காணும் 
எங்கள் அண்ணன்...
அறிவுடைய நம்பி.......
மதுரை பெற்ற மாமேதை...
விருதுநகரின் விழுது....
அஞ்சா நெஞ்சர் (வயசாவுது இல்ல)
தலைக்கு பிறகு நரைக்கு அழகு சேர்த்த 
என்றும் தேயாத பிறையே 
தமிழ் உறங்கும் உறையே 
எங்கள் மனம் வீற்றிருக்கும் சிறையே 
இப்படி சொல்லி கொண்டே போனால்...
மார்ச் மாதம் வந்துடும் (ஞாபகம் இருக்கட்டும்)

அதனால் நண்பா...

என்னுடைய நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

இவண்,
"விருதுநகர்" சிவா பாசறை!!

எங்க  batch ல மொத்தம் 5 சிவா, 
அதுல இது எந்த சிவா ன்னு குழப்பம் வரும்ன்னு தெரிஞ்சு தான் 
T Siva தெளிவா "விருதுநகர்"  ன்னு போட சொன்னான்...
நான் போட்டு கொடுத்துட்டேன்:-)

pk

 

வாவ்... 

எவ்வளவு கேள்விகள்...

பதில் இல்லாதவற்றையும் கேள்வி எனலாமா?

படம் பார்த்து கேள்விகள் கேட்காதே...
முடிந்தால் பதில் செய்

Wrong number....

என்னை கேட்டால்
ஒரே மதத்தை நைய்ய புடைத்திருக்க வேண்டும்
எல்லோரும் இப்படி தான் இருக்கிறார்கள் 
என்று புரிய வைக்கும் சில அறிவு ஜீவிகளுக்கு

love  எப்படி அர்த்தபடுத்தபடுகிறது...

I love chicken...i Love fish....எனும் குறியீடு

மாற்றம் வந்தது...
நல்ல வேளை...
ஒரு பாட்டு வேறு கிரகத்தில் உருவாகவில்லை

படாத பாடு பட்டு...
தேவை இல்லாத கேள்விகளுக்கு...
பதில் சொல்ல முயல வில்லை...
கேள்விகள் தேவை என்று பார்பவர்களுக்கு
உணர செய்யாததற்க்கும்  
ஓ கடவுளே....எங்கே இருக்கிறாய்
எனும் பாட்டு...

எல்லோருமே PK தான்...

இங்கு வந்து...
எதையோ தொலைத்து

தேடியும்...
தேடாமலும்...
தேட பிடிக்காமலும்...
தேட முடியாமலும் ...
தேட தெரியாமலும்..
சிலர்

தொலைந்ததே தெரியாமல் தான்
இருக்கிறார்கள்
பலர்

ஒரு பிரியாணியின் கதை 

ஜிக்கு: என்ன டா ப்ரீயா
ஜானி: ஏன்?
ஜிக்கு: எல்லாத்தையும் உனக்கு சொல்லனுமா??
ஜானி: சொல்லாம வரதுக்கும் இல்ல செய்யறதுக்கு நான் என்ன காய்ச்சலா இல்ல மீச்சு வா?
 ——–
அதே நேரம்…. மீனா முகேஷ் வீட்டில் மீச்சு சொல்லாம கொள்ளாம Family விருந்துக்கு சென்ற போது….
மீச்சு வுக்கு விக்குது
மீச்சு: யாரோ நினைச்சுக்குறாங்க?
மீனா முகேஷ் : (நல்ல வேளை …சாப்பாட்டால இல்ல என்று நினைத்து கொண்டே) யாரா இருக்கும்?
மீச்சு: என்னைலாம் சாப்பிடும் போது தான் நினைப்பாங்க
தீபா மீச்சு: நீங்க சாப்பிடும் போதா?
மீச்சு: இல்ல..இல்ல…அவுங்க சாப்பிடும் போது தான் நினைப்பாங்க..அத்தனை அநியாயம் பண்ணி இருக்கோம் ல…சாப்பிடுற விஷயத்துல
(நல்லா தெரியும் என்பது போல் ஏதோ ஆமோதிக்கிறார் தீபா மீச்சு)
 ———-
ஜிக்கு: இல்ல ப்ரீயா ன்னு கேட்டேன்
ஜானி: ஏன்?
ஜிக்கு: நீ ஏன்னு கேக்க கூடாது
ஜானி: அப்பறோம்?
ஜிக்கு: எதுக்கு ன்னு கேக்கணும்?
ஜானி: யாரை கேக்கணும்
ஜிக்கு: என்னை தாண்டா கேக்கணும்
CHAT GROUP VOICE: எவனோ ஒருத்தன் சீக்றோம் கேளுங்க?
ஜானி: சரி எதுக்கு?
ஜிக்கு:  இல்ல…பிரியாணி….மீன் குழம்பு (போன் ரிசீவர் கீழே விழுந்து உடையும் சத்தம்)
…..
டிங் டாங் …
டிங் டாங் …
டிங் டாங் …
ஜிக்கு: யாரு…(கதவை திறந்து கொண்டே)..டே ஜானி நீயா…நீ எப்படி இங்க?
ஜானி: இல்ல நீ தான் ப்ரீயா ன்னு கேட்ட…பிரியாணி….மீன் குழம்பு வா ன்னு வேற சொன்ன…அதான்
ஜிக்கு: நான் எங்கடா வர சொன்னேன்?
ஜானி: நீ தான் கிளம்பு ன்னு சொன்னே
ஜிக்கு: நான் எங்க கிளம்பு ன்னு சொன்னேன்…மீன் குழம்பு ன்னு தான் சொன்னேன் .
ஜானி: அப்படியா சொன்ன…வர்றியா நீ ன்னு கேட்டுச்சே
ஜிக்கு: ம்…பிரியா…ணி….வர்றியா நீ…ஆயிடுச்சு?
ஜானி: அப்ப எதுவுமே இல்லையா?
ஜிக்கு: (எப்பவுமே இல்ல என்று மனதில் நினைத்து கொண்டு)…இல்ல. வந்தது தான் வந்துட்ட…இப்ப சொல்லு…ப்ரீயா?
ஜானி: (கொலை வெறியோடு)….எதுக்குடா?
ஜிக்கு: போன தடவை நீ வந்தப்போ வாங்கினமே…பிரியாணி…அதுக்கு மீன் குழம்பு…ப்ரீயா?
நிசப்தம்!!
(எப்பவும் போல 10.30 மணிக்கு அருண் ஆபீசில் கரண்ட் கட் ஆனது)
டிஸ்கி: இது ஒரு கற்பனை கதை….யார் பிரியாணியையும் உண்பதற்கு அல்ல.

தேங்க்ஸ் அங்கிள்

இன்னைக்கு(ம்)....ஒரு ஸ்கூல் பையன்

வழியில்...கழண்டு விட்ட சைக்கிள் செயினோடு போராடி கொண்டு இருந்தான்
நான் பார்த்து கொண்டே தான் வண்டியில் போனேன்
அவனும் பார்த்தான்...எதுவும் கேட்கவில்லை 
நானாக நிறுத்தி விட்டு வந்து கேட்டேன்.

தெரியுமா??

தலை இல்லை என்று சொன்னது...
யாரையாவுது உதவி கேட்டியா...
மீண்டும் தலை இல்லை என்று சொன்னது

ரெண்டு பேரும் சேர்ந்து மாட்டினோம்...

ஒன்பதாவுது படிக்கிறானாம்
சுத்தம்மா கிரீஸ் இல்ல
மறக்காம போடு என்றேன்

தலையாட்டி விட்டு
ரொம்ப அழகா
"தேங்க்ஸ் அங்கிள் " ன்னு சொல்லிட்டு போனான்.

பள்ளிகள் நன்றாக தேங்க்ஸ் சொல்ல  சொல்லி கொடுத்து இருக்கு!!